தனது திரையுலக வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்திய படங்களைப் பற்றி புரட்சித் தலைவர் குறிப்பிடுகிறார்.
1)நான் கதாநாயகனாக நடித்த
மிகப்பெரிய வெற்றி பெற்றது ‘ராஜகுமாரி’
2)குறைந்த வசதிகள் மற்றும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே படமாக்கப்பட்டு
கதாநாயகன் வேடத்திற்கு தான் ஏற்றவன் என்ற தயாரிப்பார்களுக்கு ஏற்படுத்திய
‘மருத நாட்டு இளவரசி’.
3)கதாநாயர்கள் வரிசையில் நான் இரண்டாவதா மூன்றாவதா என்ற ரசிகர்களின் குழப்பத்தை போக்கி குறிப்பிடத்தக்க கதாநாயகர்கள் வரிசையில் ஒரு இடத்தைப் பெற்றுத் தந்த ‘மர்மயோகி’
4)முதலிடத்துக்கு உயர்த்திய ‘ மலைக்கள்ளன்’
5)சொந்தமாக தயாரித்து இயக்கி இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்கள் இதயத்தில் சிறப்பான இடத்தைப் பெற்று, மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த ‘நாடோடி மன்னன்’
6)இடது கால் முறிந்த நிலையில் முதல் சமூகப் படமாக வெளி வந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘திருடாதே’
7)சமூகப் படங்களிலும் நடிக்கத் தகுந்தவன் என்பதுடன் ஒப்பந்தம் செய்தால் படம் முடிய பல மாதங்கள் ஆகலாம் என்றிருந்த அவப் பெயரையும் நீக்கிய படம் ‘ தாய் சொல்லைத் தட்டாதே’
8) ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் நடிப்பதாக சிலர் குறை கூறியபோது, புதுமையான வேடத்தில்
நடித்ததாக புகழும் மகத்தான வெற்றியும் பெற்றுத் தந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’
9)துப்பாக்கியால் சுடப்பட்டு கோபமாகவோ உரக்கவோ பேசினால் ஒரு பக்கம் நரம்புகளால் இழுக்கப்பட்டு பேசவே முடியாத நிலையில் மக்கள் என்னை ஏற்றுக் கொள்கின்றனரா இல்லையா என்பதை அறிந்து கொள்ள உதவிய படம் ‘ காவல்காரன்’
10)இரட்டையராக வேடமணிந்து
நடித்ததற்காக முதன்முதலாக தமிழக அரசின் சார்பில் பரிசு பெற்ற படம் ‘ குடியிருந்த கோயில் ‘
11)குடிகாரன் மற்றும் கொடுமைக்காரன வேடத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற அச்சத்தோடு,படம் வெளியாகி வெற்றி பெற்ற நூறாவது படம் ‘ஒளி விளக்கு’
12)ஆண், பெண் யாராயினும் நன்மை தீமை ஒவ்வொரிடத்தும் இருந்தே தீரும். ஒருவர் எதற்கு ஊக்கமும் உற்சாகமும் தருகின்றனரோ, அது முழுமை பெற்று முன்னின்று அந்த மனிதனை ஆட்ட படைக்கும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘ அடிமைப் பெண்’
13)முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்த
‘ மாட்டுக்கார வேலன்’
14)இந்தப் படம் வெற்றி பெறாது……ஓடாது என்று உருவாக்கப்பட்ட ஆரூடங்களைப் பொய்யாக்கி தமிழக வரலாற்றில் இப்படி ஒரு வசூலை பெற்ற படமே கிடையாது என்ற பெருமையைக் கொண்ட ‘ ரிக்ஷாக்காரன்’
நன்றி
மகேந்திரன் மகி
அருமை MGR information