புத்தக விமர்சனம்

0
2511

சிறப்பான சிரிப்புகள் தொகுப்பு

திருமயம் பெ.பாண்டியன்
வைகை.ஆறுமுகம்

முதற்பதிப்பு: பிப்ரவரி, 2020
பக்கம் :88
விலை ரூ.100/-

பாண்டியன்-வைகை பதிப்பகம்,
எண்:1, பாரதி நகர், அழகப்பன் தெரு, கழனிவாசல், காரைக்குடி-630 002.

சிறப்பான சிரிப்புகள் என்ற இந்த புத்தகத்தின் தலைப்பு, இந்த புத்தகத்தைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் இந்த புத்தகத்தில் ஜோக்ஸ்கள் எழுதியிருப்பவர்கள் அனைவருமே அனைத்து தமிழ் பத்திரிகைகளிலும் பிரபலமாக ஜோக்ஸ்கள் எழுதிக் கொண்டிருப்பவர்கள். அதனால் ஜோக்ஸ்களின் தரம் உண்மையிலேயே மிக சிறப்பாக இருக்கிறது.

இந்த புத்தகத்தில் ஒருவர் அல்ல, இருவர் அல்ல, மொத்தம் 81 பேர்களின் 405 ஜோக்ஸ்கள் இடம் பெற்றிருக்கின்றன. இத்தனை அதிகமான பேர்களின் ஜோக்ஸ்களுடன் வெளிவந்திருக்கும் ஒரே ஜோக்ஸ் புத்தகம் இதுதான்!

ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக இளம் எழுத்தாளர்களின் ஜோக்ஸ்களைதனது பத்திரிகையில் ஏராளமாக, தாரளமாக வெளியிட்டு, ஊக்குவித்து வருபவர் கே.பாக்யராஜ். அவரது அணிந்துரையுடன் இந்த புத்தகம் வெளிவந்திருப்பது ஒரு சிறப்பு.

‘சிரிப்புகள் மன அழுத்தம் வராமல் பாதுகாக்கும் ‘என்று பதிப்புரையில், பதிப்பாளர்கள் திருமயம் பெ.பாண்டியனும், வைகை.ஆறுமுகமும் குறிப்பிட்டிருப்பது நூற்றுக்கு நூறு விஞ்ஞான உண்மையாகும்.

‘ நாவல், சிறுகதை, கவிதை எழுதுபவர்கள் சிரிப்பு எழுதுபவர்களை படைப்பாளியாகவே மதிப்பதில்லை ‘ என்ற இவர்களது கருத்து மிக சரியானதுதான். அதோடு இவர்கள் சிரிப்பு எழுதுவது எவ்வளவு சிரமமான விஷயம் என்பதையும் எடுத்துச் சொல்லியிருப்பது பாராட்டும்படி இருக்கிறது.

தமிழகத்தின் மிகச் சிறந்த ஜோக்ஸ் எழுத்தாளர்களெல்லாம் சேர்ந்து எழுதிய புத்தகம் என்பதால் இது தன்னிகரற்ற தரத்தில் மிளிர்கிறது.

ஜோக்ஸ் எழுத்தாளர்களின் பெயர்களுடன் அவர்களது தொடர்பு எண்களையும் வெளியிட்டிருப்பது, பாராட்டுக்குரியது.

இந்த சிறப்பான சிரிப்புகள் என்ற புத்தகம், எல்லாவகையிலும் சிறப்பாக இருக்கிறது என்பதுதான் உண்மை!

-சின்னஞ்சிறுகோபு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here