கீழடி சொல்லும் பாடம்

0
1117

2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் வாழ்ந்த கீழடி இடத்தை ஆய்வு செய்ததில் எங்கும் கடவுள் சிலையோ கோயிலோ வழிபாட்டுத் தலமோ இதுவரை கிடைக்கவில்லை! நல்லது. வேறென்ன கிடைத்திருக்கிறது? அது என்ன சொல்கிறது?

அக்காலத்தின் பல தலைமுறைகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த ஆய்வில் எனக்கு புரிவது என்னவென்றால்… 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் தாத்தாக்களும் பாட்டிக்களும் அடுத்தடுத்த தலைமுறைகளை மிகவும் அக்கறையுடன் பார்ப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

பின் என்ன? சும்மாவா 650 விளையாட்டு பொருட்கள் கிடைக்கும்? பெண்களையும் மிகவும் நேசித்தவர்களாக தெரிகிறார்கள். ஆம் பெண்களின் ஆபரணங்களும் நிறையவே கிடைத்திருக்கின்றனவே.

பெரியவர்கள் ஆடும் விளையாட்டு உபகரணங்களும் கிடைத்திருக்கின்றன. ஆக, பிசியாகவும் டென்சனாகவும் இல்லாமல் விளையாடி மகிழ்ந்தே இருந்திருக்கின்றனர் பொதுவாக மக்கள்.

எக்கச்சக்கமான எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. கல்வி எளிய மக்களுக்கு நன்றாகவே கிடைத்திருக்கிறது. நிச்சயம் இன்று போல போகப் பொருளாக இருந்திருக்கவில்லை .

சட்டைக்கு போடும் பொத்தான் தங்கத்தில் கிடைத்திருக்கிறது! ஆக மேல்சட்டை அணிந்து அருமையாகவே தோரணையாகவே இருந்திருக்கின்றனர்.)

உரைக்கிணறு வைத்து கிணற்றுப் பாசனம் செய்தாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி தீர்க்காமல் மீண்டும் நிறைத்து வைத்து, நம்மை கருத்தில் கொண்டே வாழ்ந்திருக்கின்றனர்.

ஒரு பெரிய மண் பாண்ட ஆலை மற்றும் நெசவாலைகள் ஒரே ஊரில் இருந்து இருக்கின்றன. பானை, தண்ணீர் பாட்டில், விளையாட்டு சாமான், தாயம் போன்ற அனைத்தும் மண்பாண்டக் கலையாக இருப்பதைப் பார்த்தால் வீட்டுக்கு வீடு பாண்டங்களும் நெசவு செய்த உடைகளும் வாங்கித்தள்ளி இந்த இரு ஆலை வைத்திருந்தவர்களையும் இன்றைய அம்பானி அதானி ரேஞ்சுக்கு பணக்காரர்களாக்கி இருக்கக் கூடும். ஆனால் கூட்டங்களாக தொழில் செய்திருக்கிறார்கள்.

இன்றைய மகராஷ்ட்ரா , குஜராத் ஆகிய இடங்களில் கிடைக்கும் கற்களால் செய்யப்பட்ட பொருட்கள் கீழடியில் கிடப்பதால்.. வேற லெவலில் வாழ்ந்திருப்பார்கள் போல தெரிகிறது. (கார், பிளைட், ரயில் எதுவும் இல்லாம எப்படி தாத்தா எவ்ளோ தூரம் போனீங்க?!) ஒரு வேளை அங்கிருந்து இடம் பெயர்வு நடந்ததால் வழி எல்லாம் மக்கள் குடியமர்ந்து தொடர்பிலேயே இருந்திருக்கலாம். ஒரே மொழியாகவும் இருந்தது வசதியாக இருந்திருக்கலாம்.

ரோமில் உள்ள பொருட்கள் கூட! (கரன்சி வேல்யூ என்னவா இருந்திருக்கும்). ரோம் என்றவுடன் அந்த ஊர் பற்றிய கற்பனை நமக்கு வேறு விதமாக விரிந்தாலும் கிடைத்தது என்னவோ ரோமில் செய்த பானை ஓடுகள்தான். ஆக, ரோமும் அப்போது சட்டி பானைதான் செய்து கொண்டிருந்திருக்கிறது.

சொல்லிக் கொள்ளும்படி ஆயுதங்கள் கிடைத்ததாகத் தெரியவில்லை. அமைதியாக இணக்கமாக அடித்துக் கொள்ளாத மக்களாகவே இருந்திருப்பார்கள் போலும், அந்த கால கட்டத்தில்.

சுமார் 80 தலைமுறைக்கு முந்தைய வாழ்க்கையை பார்க்கையில் அவர்களுக்கு நம் மீது இருந்த அக்கறை நமக்கு நமது வருங்கால சந்ததி மேல் இல்லாமல் போய்விட்டதை எண்ணி வெட்கி தலைகுனிய தோன்றுகிறது. என்ன விட்டு செல்கிறோம் நம் பிள்ளைகளுக்காக? குப்பையைத் தவிர….? –

2600 வருடங்கள் கழித்து நம் பிள்ளைகள் நம் எலும்புகளை மண்ணிலிருந்து தோண்டிப் பார்க்கையில் நம்மை எப்படி பார்ப்பார்கள்? எல்லா வளங்களையும் குப்பையாக மாற்றி விட்டு பெருமை கொண்ட மூடர்கள் என்றுதானே கூறுவர். மக்காத பிளாஸ்டிக் குப்பை மேடுகளைத் தவிர, தரம் குறைந்து

– போடப்பட்ட நகர கட்டமைப்பைத்தவிர சொல்லும் அழித்துப்போட்ட ஏரிகளைத் தவிர வயிற்றில் பிளாஸ்டிக்கோடு இறந்து கிடக்கும் விலங்கு எலும்புகளைத் தவிர,வேறென்ன கண்டு பிடிப்பார்கள் அவர்கள்?

Keezhadi Artical

கீழடி சொல்வது என்னவென்றால், மொத்தத்தில் நாம் அனைவரும் இந்த நிலத்துக்கு வந்தேறிகளே, நாம் ஒன்றாக கலந்து கிடப்பவர்கள். இங்கு எதுவும் உயர்ந்ததல்ல தாழ்ந்ததுமல்ல.

பாழ் செய்த இயற்கையை ஒன்று சேர்ந்து செப்பனிடுவதை தவிர, சக உயிர்களிடத்தின் அன்பு செலுத்துவதை தவிர நமக்கு இங்கு எந்த வேலையும் தரப்படவில்லை .

அது தலை முறையில் கிடைத்தற்கரிய அதிசயம் செய்யாவிட்டால்

அந்த நம்மைத் தோண்டி எடுத்துத் திட்டக்கூட எந்தத் தலைமுறையும் மிஞ்சாது.

நன்றி: சுபத்ரா தேவி


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here