கீழடி மண்ணில் ரகசியம் –அது
கிடைத்தற்கரிய அதிசயம்
ஆழம் நீளுது கீழடி- அந்த
அற்புதம் தமிழன் சீரடி
தோண்டத் தோண்ட தொன்மைகள்-அத்
தோண்டலில் கிளம்புது உண்மைகள்
நீண்டு கொண்டேப் போகுது-அது
அது நிறைவேற்ற மில்லாப் புதிரது!
கணக்கிட முடியாப் பழமை-தமிழன்
கலைகளிருந்தப் புதுமை
இனம் பிரியாது வாழ்ந்தோர்-அன்றே
இலட்சிய தன்னில் தேர்ந்தோர் !
தமிழினம் உலகின் முதன்மை –கீழடி
தந்தது அந்த உண்மை
தமிழே மொழியின் மூலம்-
இனியேனும் தமிழைப் புரியணும் ஞாலம்!
- பொன்மணிதாசன்