மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…!
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜனாதிபதி குரூகர் வசிக்கின்ற மாளிகை உள்ள சாலையில் காந்தியடிகள் மாலை நேர நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
அந்த மாளிகையின் காவலாளிகளுக்கு இது நன்கு தெரியும். அவர்கள் யாரும் மகாத்மாவைத் தடுப்பதில்லை.
ஒரு முறை உலாச்சென்றபோது, அந்த மாளிகையில் புதிதாக பணியில் சேர்ந்த காவலாளி ஒருவன் காந்தியடிகளைத் தடுத்தான். அதுமட்டுமல்லாமல், அவரைப் பிடித்துத்தள்ளி, காலால் உதைத்தும் விட்டான்.
இக்காட்சியை அந்த வழியில் குதிரையில் வந்த கோட்ஸ் என்கிற வெள்ளையர் பார்த்து விட்டார். அவர் காந்திஜியின் நண்பர்.
அவர் காந்தியிடம், “நீங்கள் உடனே நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்! நான் வந்து சாட்சி சொல்கிறேன்!” என்றார்.
அதற்கு காந்தியடிகள் சொன்னாராம், ”எனது சொந்தக் குறைகளுக்காக எப்போதும் நான் நீதிமன்றம் செல்வதில்லை என்று உறுதி கொண்டிருக்கிறேன்” என்று.
சொந்தக் குறைகள் எவை?
பொதுக் குறைகள் எவை?
சொந்த நலங்கள் எவை?
பொது நலங்கள் எவை?
அறியத்தெரிந்தவரே மகாத்மா ஆகலாம்.
- முனைவர் சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் எழுதிய “காந்தியத் தாயத்து நுாலில்.