இளையாராஜா இசையில் பி.சுசீலா பாடல்கள்
தமிழ் திரையுலகின் பின்னணி பாடகிகளில் முன்னணி பாடகியாக வெகு காலம் நீடித்தவர் பி. சுசீலா. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் வரை பின்னணி பாடகியாக நீடித்திருந்தார். 1960களிலும் 1970களின் முற்பாதி காலங்களிளிலும் எல்லா கதாநாயகிகளுக்கும் பின்னணி .பாடியிருக்கிறார். 1970களின் பிற்பகுதியில் புதிய மாற்றம் ஏற்பட்டு, பல பின்னணி பாடகிகள் போட்டிக்கு வந்தாலும் கூட தொடர்ந்து தனது இசை பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருந்தார். இவரது குரலில் 1960களில் வெளி வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவை.
இளையராஜா இசை அமைப்பாளராக அறிமுகமான பின் அவரது இசையில் பி.சுசீலா பல நல்ல பாடல்களை பாடியுள்ளார். அந்த பாடல் பட்டியலில் 25 பாடல்களை நினைவு கூர்வோம்.
- சொந்தம் இல்லை பந்தம் இல்லை (அன்னக்கிளி)
- கண்ணன் ஒரு கைக்குழந்தை (பத்ரகாளி)
- கேட்டேளே அங்கே (பத்ரகாளி)
- செவ்வந்தி பூ (16 வயதினிலே)
- தேனில் ஆடும் ரோஜா (அவர் எனக்கே சொந்தம்)
- ஓல்டு எல்லாம் கோல்டு (ஓடி விளையாடு தாத்தா)
- தாலாட்டு பிள்ளைக்கொரு (அச்சாணி)
- என் கண்மணி என் காதலி (சிட்டுக்குருவி)
- மேகமே தூதாக வா (கண்ணன் ஒரு கைக்குழந்தை)
- மோக சங்கீதம் (கண்ணன் ஒரு கைக்குழந்தை)
- டார்லிங் டார்லிங் டார்லிங் (ப்ரியா)
- அப்பனே அப்பனே (அன்னை ஓர் ஆலயம்)
- நதியோரம் (அன்னை ஓர் ஆலயம்)
- திருத்தேரில் வரும் (நான் வாழ வைப்பேன்)
- மஞ்சள் நிலாவுக்கு (முதல் இரவு)
- சிந்து நதி கரையோரம் (நல்லதொரு குடும்பம்)
- ராஜா சின்ன ராஜா (பூந்தளிர்)
- காத்தோடு பூ உரச (அன்புக்கு நான் அடிமை)
- ஒன்றோடு ஒன்றானோம் (அன்புக்கு நான் அடிமை)
- அழகழகா பூத்திருக்கு (காளி)
- பல நாள் ஆசை (இன்று போய் நாளை வா)
- மதினி மதினி (கடல் மீன்கள்)
- அமுதே தமிழே (கோயில் புறா)
- மாப்பிள்ளைக்கு மாமன் மனசு (நெற்றிக்கண்)
- விழியில் உன் விழியில் (ராம் லட்சுமண்)